மைத்திரி – மஹிந்த இருவரினதும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது: மஹிந்த அமரவீர
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகிய இருவரினதும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என அமைச்சர் ம...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_120.html

இரண்டு தலைவர்களினதும் நடவடிக்கைகள் குறித்து நான் விரக்தியடைந்துள்ளேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைச் செயலாளர் என்ற ரீதியில் இரண்டு தலைவர்களையும் இணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து மீளவும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருக்கக் கூடாது.
தற்போதைய ஜனாதிபதி கட்சித் தலைமையை பொறுப்பேற்றுக் கொண்டால் கட்சியை வெற்றி பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவரது பொறுப்பாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் பதவிகளை ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து அறிவிக்க மத்திய செயற்குழுவினை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் மத்திய செயற்குழுவினை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு நேர் காணல் வழங்கியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate