மஸ்கெலியாவில் காணாமல்போன யுவதி சடலமாக கண்டெடுப்பு
மஸ்கெலியா,ஹப்புகஸ்தென்ன கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கடந்த 2 நாட்களாக காணாமல் போயிருந்த யுவதி, கெனியன் நீர்த் தேக்கத்திற்கு அருகிலுள்ள களனி ...


தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் நேற்று முன்தினம் (15) மாலை யுவதி வீட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலைமையின் கீழ் இன்று (17) காலை 9.30 அளவில் யுவதியின் சடலம் களனி கங்கையில் மிதப்பதாக கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
மஸ்கெலியா,ஹப்புகஸ்தென்ன கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி சரோஜினி என்ற 17 வயதான யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யுவதி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
யுவதியின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.