கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளி வீரேந்திர ஷேவாக் சாதனை

IPL போட்டிகளில் அதிக பவுண்டரிகளை அடித்து வீரேந்திர ஷேவாக், கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். நடைபெற்றுவரும் ...


IPL போட்டிகளில் அதிக பவுண்டரிகளை அடித்து வீரேந்திர ஷேவாக், கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

நடைபெற்றுவரும் 8 ஆவது IPL போட்டியில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர ஷேவாக் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார்.

அவர் 15ஆம் திகதி டெல்லி டெயார் டெவில்ஸ் அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற போட்டியில் 41 பந்துகளில் 47 ஓட்டங்களைக் குவித்தார். அதில் 4 நான்கு ஓட்டங்களும், 2 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.

ஷேவாக் இதுவரை 99 ஆட்டங்களில் விளையாடி 332 நான்கு ஓட்டங்களையும், 106 ஆறு ஓட்டங்களையும் அடித்துள்ளார்.

மொத்தம் 438 பவுண்டரிகளை அடித்துள்ளார்.

இதற்கு முன்னர் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய அணி வீரர் கிறிஸ் கெய்ல் IPL இல் அதிக பவுண்டரிகளைப் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

கிறிஸ் கெய்ல் இதுவரை 70 ஆட்டத்தில் விளையாடி 232 நான்கு ஓட்டங்களையும், 200 ஆறு ஓட்டங்களையும் அடித்துள்ளார். ஆக மொத்தம் 432 பவுண்டரிகளை அவர் அடித்திருந்தார்.

அந்த சாதனையை இந்திய வீரர் ஷேவாக் தற்போது முறியடித்துள்ளார்.

மேலும், ஷேவாக் அனைத்து வகையான 20 ஓவர் போட்டிகளையும் சேர்த்து 4000 ஓட்டங்களைக் கடந்துள்ளார். இதன் மூலம், உலக அளவில் 20 ஓவர் போட்டிகளில் 4000 ஓட்டங்களைக் கடந்த 25ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்திய வீரர்களில் 7ஆவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதற்கு முன்பு இந்திய வீரர்களில் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, கவுதம் கம்பீர், விராட் கோலி, மகேந்திர சிங் டோனி, ரொபின் உத்தப்பா ஆகியோர் 4 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்துள்ளனர்.

IPL கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டிரைக் சைட் வைத்திருப்பவரும் ஷேவாக் தான்.

99 ஆட்டங்களில் விளையாடி 2712 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
சராசரி ஓட்ட விகிதம் 28.85 ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரைட் 156.58 என்பது குறிப்பிடத்தக்கது.

Related

டி20 வரலாற்றில் சாதனை படைத்த மெக்கலம்

பேமிங்ஹாமில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற நட்வெஸ்ட் டி-20 போட்டியில் டெர்பிஷயர் அணி வேர்விக்‌ஷைர் பியர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் வேர்விக்‌ஷையார் அணி வீரர் பிரண்டன் மெக்கலம் அதிரடியாக விளையாடி...

மண்ணை கவ்விய அர்ஜென்டினா: முதன் முறையாக பட்டம் வென்று வரலாறு படைத்த சிலி

கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் சிலி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி முதன் முறையாக பட்டம் வென்றது. 99 ஆண்டுகால கோபா அமெரிக்க கால்பந்து வரலாற்றில் சிலி அணி ஒரு முறை கூட பட்டம் வெ...

நடால் அதிர்ச்சி தோல்வி: விம்பிள்டன் போட்டியில் இருந்து வெளியேற்றம்

பிரித்தானியாவில் நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பிரித்தானியாவின் லண்டனில் விம்பிள்டன் மென்பந்தாட்ட தொடர் நடைபெற்று வருக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item