மண்ணை கவ்விய அர்ஜென்டினா: முதன் முறையாக பட்டம் வென்று வரலாறு படைத்த சிலி
கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் சிலி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி முதன் முறையாக பட்டம் வென்றது. 99 ஆண்டுகால கோபா ...

99 ஆண்டுகால கோபா அமெரிக்க கால்பந்து வரலாற்றில் சிலி அணி ஒரு முறை கூட பட்டம் வென்றது கிடையாது. இதுவே சிலி அணிக்கு முதல் பட்டம் ஆகும்.
அதே சமயம் அர்ஜென்டினா அணி இதுவரை 14 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இருப்பினும் கடைசியாக இப்பட்டத்தை வென்று 22 ஆண்டுகள் ஆகிவிட்டது.
கடந்த மாதம் 11ம் திகதி சிலி நாட்டில் 44வது கோபா அமெரிக்கா கால்பந்து திருவிழா தொடங்கியது.
இதில் முன்னாள் சாம்பியன் பிரேசில், நடப்பு சாம்பியன் உருகுவே அணிகள் காலிறுதியுடன் வெளியேற்றப்பட்டன.
அர்ஜென்டினாவும், போட்டியை நடத்தும் சிலியும் இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைத்தன.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இன்று இறுதிப் போட்டியில் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இறுதிவரை எந்த அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இதனால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதிலும் எந்த அணியும் கோல் அடிக்காததால் பெனால்டி முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த பெனால்டி முறையில் சிலி 4 கோல்கள் அடித்தது. ஆனால் அர்ஜென்டினா 1 கோல் மட்டுமே அடித்தது. இதனால் 4-1 என்ற கணக்கில் சிலி அணி சாம்பியன் பட்டம் வென்றது.