சிரியா ராணுவத்தினரை படுகொலை செய்ய சிறுவர்களை கட்டாயப்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்
சிரியா ராணுவத்தினரை சிறுவர்கள் படுகொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர். சிரியாவில் உள்ள புராத...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_92.html

சிரியாவில் உள்ள புராதான நகரான பல்மைராவை கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
இதையடுத்து இந்நகரில் உள்ள புராதான சின்னங்களை அழிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்ட சிரிய ராணுவத்தினர் 25 பேரை, சிறுவர்கள் படுகொலை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில், சிரியாவின் பல்மைரா நகரில் உள்ள ரோமானிய கட்டிட அமைப்பில் உள்ள அரங்கு ஒன்றின் முன் சுமார் 25 சிரிய ராணுவத்தினர் முட்டி போட்டபடி இருக்கின்றனர்.
அவர்களின் பின்னால் 13 , 14 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் கையில் துப்பாக்கியுடன் உள்ளனர்.
மேலும் அங்கு வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான ஆண்களும் சிறுவர்களும் குவிந்துள்ளனர். பின்னர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைவர் ஒருவர் ராணுவத்தினரை சுடும்படி சிறுவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கின்றார்.
உடனே சிறுவர்களும் தங்கள் கையில் உள்ள துப்பாக்கியால் அவர்களை சுடுவது போன்ற காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த செயல் பல்வேறு தரப்பினரின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 500க்கும் மேற்பட்ட சிறுவர்களை கடத்தி தீவிரவாதிகளாக மாற்றிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

