இன்று உலக சுகாதார தினம்
தினம் தினம் எண்ணற்ற வியாதிகள் கண்டறியப்பட்டாலும், அவற்றில் இருந்து தப்பி மரணத்தை வெல்லும் திறன் படைத்த ஒன்றாய்தான் இருக்கின்றது மனித குலம்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_530.html

உலகின் உள்ள அனைவருக்கும் முடிந்த வரை கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும்.
1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார ஸ்தாபனம் (World Health Organisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை, உலக சுகாதார தினமாக கொண்டாடுகிறோம்.
ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் விசேட நோக்கங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே உலக சுகாதார ஸ்தாபனம்.
இது சுகாதாரம் தொடர்பிலான நிலைப்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் சுகாதாரம் தொடர்பான நிகழ்தகவுகளை வெற்றிகரமாக கொண்டு செல்வதே இந்த ஸ்தாபனத்தின் குறிக்கோளாகும்.
உலகளவில் பல நாடுகளை இந்த ஸ்தாபனம் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் இலங்கையும் இதில் அங்கத்துவ நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஒவ்வொரு குறிக்கோளை உள்ளடக்கி இந்த தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த வருடத்தின் இலக்கு “உணவு பாதுகாப்பு”இந்த விடயம் இலங்கைக்கு அத்தியாவசியமானதாகும்


Sri Lanka Rupee Exchange Rate