வீதி ஒழுங்குமுறை சட்டத்தை அத்துமீறிய சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வீதி ஒழுங்குமுறை சட்டத்தை அத்துமீறிய 378 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (06) முன்னெடுக்கப்பட்ட ச...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_689.html

கொழும்பில் நேற்று (06) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது அதிகமான சாரதிகளுக்கு தண்டப் பத்திரம் வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள 05 பிரதான வீதிகளில் வீதி ஒழுங்குமுறை சட்டம் தொடர்பான முன்னோடி நடவடிக்கை நேற்று (06) அமுல்படுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்த சட்டத்திற்கு அமைய வாகன சாரதிகள் வீதி ஒழுங்கு கோடுகளில் முறையற்ற விதத்தில் வாகனங்களை செலுத்த முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு கவனயீனத்துடன் வீதி ஒழுங்குக் கோடுகளை குறுக்கிட்டு வாகனங்களை செலுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைத்துக்கொள்வதற்காக இந்த சட்டத்தை செயற்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.