மீண்டும் அரசியலுக்கு வருவதாக கூறும் கோத்தா
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் காலங்களில் அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று சிங்கள ஊடகமொன்றுடன் ...


நேற்று சிங்கள ஊடகமொன்றுடன் இடம் பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமாக நடைமுறையில் உள்ள அரசாங்கத்தில் செயற்படுவதற்கு எனக்கு யோசனை இல்லை.
பல காரணங்களுக்காகவும் பலரின் வேண்டுக்கோளிற்கமையவும் இறுதியாக அரசியலுக்கு வர தீர்மானித்துள்ளேன்.
எப்படியிருப்பினும் அரசியலுக்கு வரவதற்கான கட்சியை நான் இதுவரை தீர்மானிக்கவில்லை.
எனது அவசியமாக இருப்பது எதாவது ஒருவகையில் நாட்டிற்கு சேவை செய்ய செய்வதும், அதிகாரி என்ற ரீதியில் அதனை என்னால் செய்ய முடியும் எனவும் நான் நம்புகிறேன்.
நான் கடந்த காலங்களில் பல்வேறு சேவைகளை நாட்டிற்கு செய்துள்ளேன். எதிர்வரும் காலங்களில் அரசியலுக்கு சென்று மேலும் பல சேவைகளை நாட்டிற்கு வழங்குவதற்கு நான் எதிர்பார்க்கிறேன் என கோத்தபாய ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.