நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் முழுவடிவம்

நான் ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாள் நிறைவடைந்துள்ள நிலையில்உங்களிடம் பேச ஆவலாய் உள்ளேன். இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல், சர்வதே...


நான் ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாள் நிறைவடைந்துள்ள நிலையில்உங்களிடம் பேச ஆவலாய் உள்ளேன்.

இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல், சர்வதேச தொடர்பு என்பவற்றை நோக்காகக் கொண்டு நாம் புதிய பல திட்டங்களை முன்னெடுத்தோம்.

ஜனாதிபதி தேர்தல் ஊடாக கிடைத்த ஜனநாயகத்தினூடாக கடந்த 3 மாத காலங்களில் சிலருடைய நடத்தைகள் மற்றும் சில அரசியல்வாதிகளுடைய நடத்தைகளில் மாற்றங்களை காண்கையில் உலக வரலாற்றில் மாற்றத்தின் பின்வரும் விளைவுகளை கண்டேன்.

அன்று ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களின் அழுத்தங்களை நீங்கள் அறிவீர்கள்.

மக்கள் ஆணையினூடாக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் சர்வதேச ரீதியில் நட்புகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

நான் சீனாவுக்கு சென்றதும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த முடிந்தது.

மக்கள் ஆணையினூடாக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் சர்வதேச ரீதியில் நட்புகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

வெளிநாட்டு அரச தலைவர்கள் என்னோடு கலந்துரையாடிய விதம் அற்புதமானது, அழகானது.

வெளிநாட்டுத் தலைவர்கள், இராஜதந்திரிகள், முக்கிய பிரதிநிதிகள் எமது நாட்டுக்கு வருகை தந்து உறவை வளர்த்தார்கள்.

100 நாட்களில் என்ன செய்தோம் என்று கேட்கிறார்கள். நாம் சர்வதேசத்தின் ஆதரவை பொற்றுக்கொண்டுள்ளோம்

அன்று அரச ஊழியர்கள் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை. தொலைபேசியில் கூட சுதந்திரமாக கதைக்க முடியவில்லை. இந்த 3 மாதத்துக்குள் நாம் அந்த சுதந்திரத்தை பெற்று கொடுத்துள்ளோம்.

அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளோம்.

அன்று நீதித்துறை மீது நம்பிக்கை இருந்ததா? இல்லை.

அன்று நீதிபதிக்கு சுதந்திரம் இருந்ததா? நான் பிரதம நீதியரசரை நியமித்தல் இராணுவத் தளபதியை நியமித்தல் எல்லாம் குறித்த துறைகளில் சிறப்பானவர்களை நியமித்தேன்.

என்னை தைரியம் இல்லாதவர், தலைமை பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் என்று சொல்லுகின்றார்கள்.

நான் அதிகாரத்தை கையில் எடுக்க ஆட்சிக்கு வரவில்லை.

என்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகாரத்தை நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தேன். அவ்வாறே செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களை நான் பணிவாக கேட்டுகொள்வது என்னவென்றால் மக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து 19வது திருத்துக்கு ஆதரவாக வாக்களியுங்கள்.

புதிய தேர்தல் முறை தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாராளுமன்றத்தில் அதை சமர்ப்பித்து நடைமுறைப்படுத்த எதிர்பாரக்கின்றேன்.

அனைத்து இனங்களுக்கு மத்தியிலும் சுமுகமான உறவு ஏற்படும் வகையில் அனைவரையும் ஒன்றிணைக்க முடிந்தது.

அனைத்து இனத்தவர்களும் முரண்பாடுகள் இன்றி வாழ்வதை உறுதிப்படுத்த ஜனாதிபதி செயலணியை உருவாக்கினோம். அது மாத்திரமின்றி பிரத்தியேக செயலகம் ஒன்றையும் ஸ்தாபித்தோம்.

இணையத்தினூடாக பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்களவர்களை தவிர்த்து தமிழ் -முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.

நாம் இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

எமது நாடு உலகத்தில் ஆசிர்வதிக்கப்பட்டதும் இயற்கை வளங்களை கொண்டதுமாகும். நாம் அதனை பாதுகாக்க வேண்டும்.

நல்லாட்சியினூடாக கிடைத்துள்ள ஜனநாயகத்தை தவறாக பயன்படுத்தாமல் நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

நான் இதுவரை எந்தவொரு லஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் தொலைபேசி அழைப்பு விடுக்கவில்லை.

அதேபோன்று நீதித்துறை சார்ந்த எவருக்கும் நான் அழைப்பு எடுக்கவில்லை.

அலரிமாளிகையில் அன்று 1575 பேர் தொழில் புரிந்தனர். ஆனால் இன்று 600 பேர் தொழில் புரிகின்றார்கள். நாம் முன்னுதாரணமாக இருக்கின்றோம்.

நாம் ஆரோக்கியமான கலாசாரத்தை கட்டியெழுப்புவோம். நாட்டு மக்களின் நன்மை கருதியும் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியும் பொறுப்புணர்வோடு செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாம் முன்னோக்கிச் செல்வோம். புதிதாக சிந்திப்போம். அனைவருக்கும் அதிர்ஷ்டமும் சுபீட்சமும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

Related

தலைப்பு செய்தி 7049370032025488857

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item