மஹிந்த வந்தால் ஐக்கிய தேசிய கட்சிக்கே நன்மை கிட்டும்!
இம்முறை பொது தேர்தலில் பெரும்பான்மை அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க நம்பிக்கை வெளியிட...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_82.html

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதன் ஊடாக தங்கள் கட்சிக்கு கிடைக்கவுள்ள வாக்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் வேட்புமனு வழங்க தீர்மானித்தமையினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கூடுதல் நன்மை என இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய பல சக்திகள் கூட்டணியின் தீர்மானத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய ஆயத்தமாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.