நடால் அதிர்ச்சி தோல்வி: விம்பிள்டன் போட்டியில் இருந்து வெளியேற்றம்
பிரித்தானியாவில் நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பிரித்தானிய...


பிரித்தானியாவின் லண்டனில் விம்பிள்டன் மென்பந்தாட்ட தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், 2 முறை விம்பிள்டன் தொடரைக் கைப்பற்றியவரும் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஸ்பெயினின் ரபேல் நடால், தரவரிசையில் 102வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் டஸ்டின் பிரவுனை எதிர்கொண்டார்.
இதில் ரபேல் நடால் 5-7, 6-3, 4-6, 4-6 என்ற செட்களில் டஸ்டின் பிரவுனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்த வெற்றி குறித்து பிரவுன் கூறியதாவது, இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை என்பதால் தைரியமாக விளையாடியேன்.
என்னுடைய விளையாட்டு அவரை விளையாட விடாமல் செய்துவிட்டது. அவரால் சீராக விளையாட முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த வெற்றிக்கு பின்னர் சமூக வலைதளங்களில் பிரவுனுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரபெல் நடால் தரவரிசைப் பட்டியலில் 102 வது இடத்தில் இருக்கும் பிரவுனிடம் தோல்வியடைந்ததையடுத்து அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.



