முழுவதும் தீ பற்றிய கட்டிடம்: உயிர் தப்புவதற்காக மூன்றாவது மாடியில் இருந்து குதித்த சகோதரிகள்

ஜார்ஜியாவில் வீடு முழுவதும் தீ பிடித்ததால் உயிர் தப்புவதற்காக 3வது மாடியில் இருந்து குதித்த சகோதரிகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமத...

ஜார்ஜியாவில் வீடு முழுவதும் தீ பிடித்ததால் உயிர் தப்புவதற்காக 3வது மாடியில் இருந்து குதித்த சகோதரிகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்ஜியா நாட்டின் அட்லாண்டா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ பற்றிக்கொண்டது.

இதையடுத்து குடியிருப்பின் உள்ளிருந்தவர்கள் அலறியடித்துகொண்டு வெளியேறினர். இந்நிலையில் 3 மாடியில் இருந்த சகோதரிகள் இருவர் தீயில் சிக்கி கொண்டனர்.

பின்னர் தப்பிப்பதற்காக வீட்டின் ஜன்னலை உடைத்து 3வது மாடியில் இருந்து குதித்தனர். முதலில் குதித்த மூத்த சகோதரி கீழிருந்த ஒருவரின் கையில் குதித்துள்ளார்.

பின்னர் 6 வயது மதிக்கத்தக்க அவரது சகோதரி குதித்ததில் அவரது காலில் கண்ணாடி துண்டு ஆழமாக பதிந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் குதித்த சில நிமிடங்களில் அந்த கட்டிடம் முழுவதும் தீக்கு இரையானது. காயமடைந்த சகோதரிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கபடவில்லை. முன்னதாக இந்த தீ விபத்தில் 29 பேரின் வீடுகள் எரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related

தலைப்பு செய்தி 460554895797454664

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item