கலாநிதி விக்ரமபாகுவிற்கு நிலுவைச் சம்பளம் மற்றும் பதவி உயர்வு!
புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு நிலுவைச் சம்பளம் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளன. கருணாரட்ன பேர...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_23.html

கருணாரட்ன பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் பதவியை வகித்து வந்தார்.
1982ம் ஆண்டிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த சம்பள நிலுவைகளும் பதவி உயர்வுகளும் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வந்ததாக விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக போராடியதனால் பணி நீக்கம் செய்யப்பட்டேன்.
பின்னர் செய்த மேன்முறையீட்டைத் தொடர்ந்து பணியில் அமர்த்தப்பட்டேன்.
1982ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக போராடியதனைத் தொடர்ந்து மீண்டும் தொழிலை இழக்க நேரிட்டது.
அன்று முதல் மேன்முறையீடு செய்த போதிலும் எந்தவித பயனும் இல்லை.
2001ம் ஆண்டு உயர்கல்வி அமைச்சராக கடமையாற்றிய சரத் அமுனுகம, என்னை பணியில் மீள இணைத்துக் கொள்ளுமாறு பிறப்பித்த உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை.
எவ்வாறெனினும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிலைமைகளை சரியான புரிந்து கொண்டு 2001ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளார்.
இதன்படி, 1982ம் ஆண்டு முதல் நிலுவைச் சம்பளம் மற்றம் பதவி உயர்வுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மீளவும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்ட போதும் குறித்த வயதெல்லையை கடந்துள்ளதனால் ஓய்வு பெற்றுக் கொள்வேன் என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விபரங்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதிகளில் விக்ரமபாகுவை மீளவும் பணிக்கு அமர்த்துவதும் ஒர் வாக்குறுதி என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate