டி20 வரலாற்றில் சாதனை படைத்த மெக்கலம்
பேமிங்ஹாமில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற நட்வெஸ்ட் டி-20 போட்டியில் டெர்பிஷயர் அணி வேர்விக்ஷைர் பியர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் வே...

பேமிங்ஹாமில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற நட்வெஸ்ட் டி-20 போட்டியில் டெர்பிஷயர் அணி வேர்விக்ஷைர் பியர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் வேர்விக்ஷையார் அணி வீரர் பிரண்டன் மெக்கலம் அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் 11 சிக்சர்களும் 13 பவுண்டரிகள் அடங்கலாக 158 ஓட்டங்களைக் குவித்தார். இதில் மெக்கலம் 42 பந்துகளில் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய மெக்கலம், 73 பந்துகளில் 158 ஓட்டங்களை குவித்திருந்தார்.
மேலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் பெங்களூர் அணி சார்பாக புனே அணிக்கு எதிராக 175 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதே டி20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
இதன் மூலம் டி20 வரலாற்றில் 150 ஓட்டங்களை இரு தடவைகள் கடந்த வீரர் எனும் சாதனையை மெக்கலம் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கெய்ல் இந்த சாதனையை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.