பாடசாலை வளப்பற்றாக்குறையை சுட்டிக்காட்டிய அதிபரை அதட்டி அமர வைத்த ரணில்!
நீ பாடசாலைக்குச் செல்லும்போது நான் கல்வியமைச்சராக இருந்தவன். போதும் உட்காரு என, வவுனியா தேசிய பாடசாலை அதிபர் ஒருவரைப் பார்த்து பிரதமர் ரணி...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_103.html
இதில், வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் தனது பாடசாலையின் குறைகள் தொடர்பாக எழுந்து நின்று பேசியபோது ஆய்வுகூடம், கட்டிடட வசதி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போன்றன தமது பாடசாலையில் இருப்பதாக கூறினார்.இதன்போது உங்கள் பாடசாலை போரினால் பாதிக்கப்பட்டதா? என பிரதமர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சற்றே தடுமாறிய அதிபர் இல்லை எங்கள் பாடசாலையில் முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என மீண்டும் மீண்டும் கூறியதுடன், தங்கள் பாடசாலையில் வளப்பற்றாக்குறை உள்ளது என மீண்டும் கூறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் கோபமுற்ற பிரதமர் ரணில் நீ பாடசாலைக்கு செல்லும்போது நான் கல்வி அமைச்சராக இருந்தவன், அதிகம் பேசாதே போதும் உட்காரு என சிங்கள மொழியில் கூறினார். இதனையடுத்து சற்றே திகைப்படைந்த குறித்த அதிபர் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate