இந்திய – இலங்கை வெளிவிகார அமைச்சர்கள் இன்று சந்திப்பு
இந்திய – இலங்கை வெளிவிகார அமைச்சர்கள் இன்று கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் இன்ற...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_283.html

இந்திய – இலங்கை வெளிவிகார அமைச்சர்கள் இன்று கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று நாட்டை வந்தடைந்தார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி இந்திய பிரதமரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்னோடியாக, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயம் அமைந்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஏனைய அரசியல் கட்சிகள் சிலவற்றின் முக்கியஸ்தர்களையும் சந்திப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது