இந்திய பிரதமரின் மாலைத்தீவு விஜயம் ரத்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாலைத்தீவிற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய பிரதமரின் மாலைத்தீவு விஜயம் ரத்து செய்யப்பட்டமை...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_197.html

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாலைத்தீவிற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரின் மாலைத்தீவு விஜயம் ரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்டவில்லை என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் அந்நாட்டின் உள்விவகாரங்களுக்குள் தலையிடுவதற்கு விரும்பாமையினாலேயே மாலைத்தீவு விஜயம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவின் முன்னால் ஜனாதிபதி மொஹமட் நஸீட் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.