ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு விஜயம்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பிரித்தானிய மகாரணியார் தலமையில் மார்ச் 9 ஆம் திகதி ஐ...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_946.html

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பிரித்தானிய மகாரணியார் தலமையில் மார்ச் 9 ஆம் திகதி ஐக்கிய இராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இன்று முற்பகல் 9.50 இற்கு சாதாரண பயணிகள் விமானமொன்றின் மூலமே ஜனாதிபதி ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதியின் நான்கு நாள் விஜயத்தில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரனை சந்திக்கவுள்ளதுடன், சர்வகட்சி பாராளுமன்ற குழுவுடனும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், புதிய அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிசெய்வதற்கும், பொதுநலவாய நாடுகளுடனான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் அமுல்படுத்துகின்ற கொள்கைகள் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.