டி வில்லியர்ஸ் போராட்டம் வீண், முதல் முறையாக பாகிஸ்தான் வெற்றி பெற்றது

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், டிவில்லியர்ஸ் போராட்டம் வீணானது. பாகிஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்...

Live Score - Pakistan vs South Africa, 29th World Cup Match in Auckland

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், டிவில்லியர்ஸ் போராட்டம் வீணானது. பாகிஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

உலக கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று ஆட்டங்கள் ‘தலைவிதி’யை நிர்ணயிக்கும் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. ஆக்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பீல்டிங்க் செய்வதாக அறிவித்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. 

46.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222  ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மிஸ்பா உல் ஹக் 56 ரன்கள் எடுத்தார். தென்ஆப்ரிக்க அணி தரப்பில் ஸ்டையின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணியும் பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு சற்று பணிந்தது. தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் காக் ரன்எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்து விக்கெட் சரிவை சந்தித்தது. 

பாகிஸ்தான் அணியில் இப்ரான் 3 விக்கெட்களையும், ராஹத் அலி 3 விக்கெட்களையும், ரியாஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பாகிஸ்தானின் பந்துவீச்சு ஓங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் தனது பொறுப்பான ஆட்டம் மூலம் அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். தென் ஆப்பிரிக்கா அணி 32.2 ஓவர்களுக்கு 200 ரன்கள் எடுத்திருந்தபோது, நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த டிவில்லியர்ஸ் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. டி வில்லியர்ஸ் 77 ரன்களில் (58 பந்துகள், 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) அவுட் ஆகி நடையை கட்டினார். சோகையில் கான் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய இம்ரான் தாகீரும் வந்தவேகத்தில் சென்றுவிட்டார். 

தென் ஆப்பிரிக்கா 33.3 ஓவர்களில் அனைத்துவிக்கெட்களையும் இழந்து 202 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. டி. வில்லியர்ஸ் போராட்டம் கடையில் வீணானது. உலக கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் முதல் முறையாக பாகிஸ்தான் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு காலிறுதி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது. 

Related

விளையாட்டு 2302214653768397513

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item