பிரதமரின் நிகழ்வுகளுக்கு முதலமைச்சர் அழைக்கப்படவில்லை! - அவைத் தலைவர் விளக்கம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான மூன்று நாட்கள் பயணத்தின் போது இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி....
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_550.html

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவைத்தலைவர், 'அரசாங்கத்துக்கும் வட மாகாணசபைக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லாத தற்போதைய காலச்சூழ்நிலையில், பிரதமரின் வடக்குக்கான விஜயத்தின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஏன் அழைக்கவில்லை என்பது கேள்விக்குரியதே. இவ்வாறு அவரை அழைக்காமல் இருந்ததற்கு காரணம் தெரியவில்லை.
பிரதேசத்துக்கு பிரதமரொருவர் விஜயம் செய்வாராயின் அந்த விஜயம் தொடர்பில் முதலமைச்சர்களுக்கு அறிவிக்கப்படுவதே வழமை. இருப்பினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயம் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு அதிகாரியும் அறிவிக்கவில்லை. அதேசமயம், இதை பாரிய பிரச்சினையாக்க வேண்டிய அவசியமும் இல்லை' என்றும் அவைத் தலைவர் மேலும் கூறினார்.


Sri Lanka Rupee Exchange Rate