யாழ்ப்பாணம் செல்லும் முதல் இந்திய பிரதமர்
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் முதல் இந்திய பிரதமர் என்ற அடிப்படையில் தாம் பெருமையடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_737.html

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் முதல் இந்திய பிரதமர் என்ற அடிப்படையில் தாம் பெருமையடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அவரது பேஸ்புக் தளத்தின் பதிவு ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.28 வருடங்களின்பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் சிறிலங்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.
அதேநேரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் முதலாவது பிரதமராகவும் நரேந்திர மோடி கருதப்படுகிறது. இது தமக்கு பெருமையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறிலங்காவில் அனைத்து சமுகங்களின் தீர்வுக்காகவும் தாம் கூடிய கவனம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.