விமானிகளின் மனைவிகளுக்கு தடபுடலாக விருந்தளித்த கிம் ஜாங்: காரணம் என்ன?
வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன் மகளிர் தின விழாவில் கலந்து கொண்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 8ம் திகதி உலகெங்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_511.html

வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன் மகளிர் தின விழாவில் கலந்து கொண்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 8ம் திகதி உலகெங்கிலும் கோலாகலமாய் கொண்டாடப்பட்ட மகளிர் தின விழா, வடகொரியாவிலும் வெகு சிறப்பாகவே நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், விமானிகளின் மனைவிமார்களுக்கு அழகு சாதன பொருட்களை தன் கமாண்டர்களின் மூலம் வழங்கி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களுக்காக விருந்து ஏற்பாடு செய்து உற்சாகப்படுத்தியதுடன், பெண்களுக்காக தற்போது அதிக சலுகைகளையும் அளித்து வருவதால், கிம் ஜாங் ஒரு பெண்ணியவாதி என்பது புலப்படுகிறது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இப்படி ஒரு வித்தியாசமான செயலை சற்றும் எதிர்பார்க்காத வடகொரிய மக்கள், கிம் ஜாங்கை நினைத்து பெருமிதம் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே தனது மகளிர் தின வாழ்த்துகளை இணையத்திலும் கிம் தெரிவித்துள்ளார்.




Sri Lanka Rupee Exchange Rate