நாமல் ராஜபக்ஷ சி.ஐ.டி யிடம் செல்ல , யோசித ராஜபக்ஷவும் கூடவே சென்றார் !
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் கடற்படை லெப்டினன் யோசித ராஜபக்ஸ, அவரது சகோதரர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுடன் குற்ற...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_90.html

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் கடற்படை லெப்டினன் யோசித ராஜபக்ஸ, அவரது சகோதரர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். நேற்றைய தினம் (04) காலை 8.40 அளவில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது. யோசித ராஜபக்ஸவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தே, உதித் லொக்குபண்டார மற்றும் ரொசான் ரணசிங்க ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
இதேவேளை, தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அழைப்பு விடுக்கப்பட்ட உடன் எவ்வித தாமதமும் இன்றி குற்ற புலனாய்வுப் பிரிவிற்கு சமூகமளித்ததாகத் தெரிவித்துள்ளார். யோசிதவின் குற்றமற்ற தன்மையை நிரூபிக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தந்தை தேர்தில் போட்டியிடுவாரா என்பதனை தமக்கு கூற முடியாது எனவும் அதனை தந்தையிடமே கேட்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate