வெலெ சுதாவின் முக்கிய முகவர் சுராஸ் அகமட் 15 வயதுச் சிறுமியுடன் கைது !
இலங்கையின் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் , வெலெ சுதாவின் முக்கிய முகவர் என சந்தேகிக்கப்படும் சுராஸ் அகமட் என்பவர் ஹபரனையில் கைதுசெய...
http://kandyskynews.blogspot.com/2015/03/15.html

இலங்கையின் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் , வெலெ சுதாவின் முக்கிய முகவர் என சந்தேகிக்கப்படும் சுராஸ் அகமட் என்பவர் ஹபரனையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபர் கைதுசெய்யப்பட்ட வேளை அவருடன் 15 வயது சிறுமியும் காணப்பட்டதாகவும், குறிப்பிட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திய வேளை அவர் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் குறிப்பிட்ட சிறுமியினது ஆபாசப்படங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளனர். இதனை தொடந்து அவர் மீது சிறுமியை தடுத்து வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு பதியப்பட்டுள்ளது.கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னர் இந்த நபரிற்கு எதிராக போதைப்பொருள் வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் அவர் அதிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது. (அப்போது மகிந்தரின் செல்வாக்கு அவருக்கு இருந்தது)
பொலிஸார் வெலெ சுதாவின் முகவர்களை தேடி வருவது தெரியவந்ததும் குறிப்பிட்ட நபர் கொழும்பிலிருந்து தப்பி ஹபரனை சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஓரு மாதமாக நாங்கள் அவரை தேடி வந்துள்ளோம்.ஓரு முறை கல்கிசையில் அவரை கைதுசெய்ய முயன்றவேளை அவர் அங்கிருந்து தப்பினார் என்றும்பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெகிவளையை சேர்ந்த அகமட் ,வெலெ சுதாவின் நடவடிக்கைகளில் நெருங்கிய பங்கை வகித்தார்,எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்


Sri Lanka Rupee Exchange Rate