கண்டி பேரணியில் பங்குபற்ற போவதில்லை - சிறிலங்கா சுதந்திர கட்சி
நாளை மறுதினம் கண்டியில் நடைபெறவுள்ள பேரணியில் பங்குபற்றப் போவதில்லை என்று, சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தேசிய அமைப்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_61.html

கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜெயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதம வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை நியமிக்க வலியுறுத்தி, கண்டியில் இந்த பேரணி நடத்தப்படவுள்ளது.
மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரிகள் முன்னணி மற்றும் பிவித்துரு ஹெல உறுமய என்பன இதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் இதில் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று அவர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் தமது கட்சிக் கூட்டத்தை தவிர, ஏனைய கூட்டங்களில் கலந்து கொள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான நாமல் ராஜபக்ஷவிடம் கேட்ட போது, கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு சகலரும் கட்டுப்பட வேண்டும் என்று கூறினார்.
அதேநேரம், அடுத்த பொதுத் தேர்தலில் மகிந்தராஜபக்ஷ போட்டியிடுவாரா? இல்லையா? என்பதை, அவரே தீர்மானிப்பார் என்றும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate