மஹிந்தவின் மாளிகையை மக்கள் மயப்படுத்தினார் மைத்திரி
யாழ்ப்பாணத்தில் மிகவும் ஆடம்பரமான முறையில், மஹிந்த ராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்ட அரச மாளிகையை மக்கள் மயப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்த...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_93.html

யாழ்ப்பாணத்தில் மிகவும் ஆடம்பரமான முறையில், மஹிந்த ராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்ட அரச மாளிகையை மக்கள் மயப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த மாளிகையில் நான் குடியேற மாட்டேன்.
யாழ்ப்பாணத்தில் இரகசியமான முறையில் அமைக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மாளிகையின் பணிகள் 90 வீதம் பூர்த்தியாகியுள்ளன. இதனை முதல் தடவையாகவே நான் பார்க்கின்றேன்.
நாட்டில் நிலவி வரும் பிரச்சிணைகளை புரிந்து கொண்டு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate