உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கியது ஆஸ்திரேலியா
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. பெர்த...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_77.html

பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தது. மின்னல் வேசத்தில் சதம் அடித்த டேவிட் வார்னர் 178 ரன்களும், ஸ்மித் 95 ரன்களும், மேக்ஸ்வெல் 88 ரன்களும் குவிக்க, அந்த அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 417 ரன்கள் விளாசியது.
இதையடுத்து 418 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கிலும் சொதப்பியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்கூட 50 ரன்களை எட்டவில்லை. அதேசமயம் ஜான்சன், ஸ்டார்க் போன்ற பவுலர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறியதுடன், சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக நவ்ரோஸ் மங்கள் 33 ரன்கள் அடித்தார்.
இதனால், 37.3 ஓவர்களில் அந்த அணி 142 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate