முகத்தை மூடி ஹெல்மட்டிற்கு தடை என்றால் முஸ்லிம் பெண்களும் முகத்தை மூடுவதை தடை செய்யவும். இல்லாவிட்டால் நாங்களும் காவி உடையுடன் முகத்தை மூடி செல்வோம்.

                                 இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது. முகத்தை மூடி ஹெல்மட் அணியும் தடைச் சட்டத்தை நிராகரிக்குமாற...

                                
இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது. முகத்தை மூடி ஹெல்மட் அணியும் தடைச் சட்டத்தை நிராகரிக்குமாறு நாம் இந்நாட்டு இளைஞர்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறினார்.
முஸ்லிம் பெண்களுக்கு முகத்தை முடிக்கொண்டு செல்ல முடியுமாக இருந்தால், ஏன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது முகத்தை மூட முடியாது என்று சட்டம் கொண்டு வருகின்றீர்கள். இந்த நாட்டில் சட்டம் என்றால் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதைத் தடுக்கும் சட்டத்தையும் உடன் நடைமுறைப்படுத்துங்கள். இல்லாது போனால் நாமும் காவி உடை அணிந்து முகத்தை மூடிக்கொண்டு செல்ல ஆரம்பிப்போம். இது எமக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பம் எனவும் தேரர் மேலும் கூறினார்.

Related

இலங்கை 4788068131945241366

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item