உலகக் கோப்பை: ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி பாகிஸ்தான் 2 ஆவது வெற்றி

இன்றைய உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 129 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. ...

இன்றைய உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 129 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில்  முதலில்
பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து சற்று கடின இலக்கை நோக்கி ஆடியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி. ஆட்டம் தொடங்கிய சற்று நேரத்திலேயே தொடக்க வீரர்கள் அலி மற்றும் பெரெங்கர் ஆட்டமிழந்தனர். பின் வந்த கிருஷ்ண சந்திரன் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின் இணைந்த குர்ரம் கான் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அன்வர் நிதான ஆட்டத்தை அரங்கேற்றினார்.
 
மறுமுனையில் குர்ரம் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அன்வர் தனது அரை சதத்தை கடந்தார். எனினும் பவர்பிளேவில் அன்வர் அவுட்டானார். பின் வந்த முஸ்தபாவும்  டக் அவுட்டாகி திரும்பினார்.  அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்திய ஜாவேத் 40 ரன்களில் ஏமாற்றினார். இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 210 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 129 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

Related

விளையாட்டு 1526771803558039549

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item