தலதா மாளிகையில் சிங்கக் கொடி! - பொலிஸ் விசாரணை

கண்டி தலதா மாளிகை வாளாகத்தில் இருந்த தேசியகொடியை பலாத்காரமாக அகற்றி விட்டு சிங்கள கொடி ஏற்றப்பட்டமை குறித்து கண்டி பொலிசாருக்கு புக...

கண்டி தலதா மாளிகை வாளாகத்தில் இருந்த தேசியகொடியை பலாத்காரமாக அகற்றி விட்டு சிங்கள கொடி ஏற்றப்பட்டமை குறித்து கண்டி பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள மகுள் மதுவயில் ஏற்றப்பட்டு இருந்த இலங்கையின் தேசியக் கொடியை கீழிறக்கி அங்கு சிங்கள கொடி என அழைக்கப்படும் ஒரு கொடியை பறக்கவிட ஒரு கும்பல் முயற்சி செய்ததால் அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.

இது தொடர்பில் கண்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறிப்பிட்ட கும்பலின் செயலை தடுத்து நிறுத்திய போது இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது. நேற்று தலதா மாளிகையில் பத்தரமுல்ல சுவர்ணசங்க நிதியம் என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலேயே இந்த சம்பவம் நடைபெற்றது.
இது குறித்து தலதா மாளிகையின் நிர்வாக செயலாளரின் புகாரின் அடிப்படையில் கண்டி பொலிசார் விசாரணைகணை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related

இலங்கை 4011280502217775238

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item