இரு முன்னாள் அமைச்சர்கள், ஒரு எம்.பி விரைவில் கைது!

இரு முன்னாள் அமைச்சர்களும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் சொத்த...

இரு முன்னாள் அமைச்சர்களும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்த குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் கடந்த சில வாரங்களாக இலங்ச மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வந்தது.

இவர்கள் மூவரும் ஏற்கனவே ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடிய சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் திட்ட அமைச்சர் ஒருவர், மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சரவை அமைச்சர் மற்றும் தெற்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளனர்.

Related

இலங்கை 791239443473359128

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item