போர்க்குற்ற ஆவணப்படத்தை சிங்களத்தில் தயாரிக்க முயன்றவர்கள் கொழும்பில் கைது!
இலங்கை இராணுவத்துக்கு அவதூறு ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்ட காணொளி ஒன்றைக் கைப்பற்றியுள்ள பொலிசார், அதற்கு பங்களிப்பு வழங்கிய நபர்களையும்...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_553.html

சிங்களத்தில் மொழி பெயர்த்து குரல்களை பதிவு செய்வதற்காக இந்த காணொளி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை போன்றதொரு அமைப்பிடம் சமர்ப்பிக்கும் நோக்கில் இக்காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.
நாரஹென்பிட்டியில் அ.மைந்துள்ள வீடொன்றில் காணொளிக்கான பின்னணி பேசும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நேற்று பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். ஐந்து தமிழர்களும் மூன்று சிங்களவர்களும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பின்னணி பேசுவதற்காக பயன்படுத்திய கருவிகளை பொலிஸார் மீட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி உள்ளனர்.