ஆஸ்திரேலிய கேப்டன் ஓய்வு
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட் செய்ய மைதானத்திற்கு வந்தபோது,...


ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், உலக கோப்பை பைனலுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். கடைசி ஒருநாள் போட்டியில் ஆட களமிறங்கிய கிளார்க்கிற்கு ரசிகர்கள் ஆரவார வரவேற்பு 244 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிளார்க் 7,907 ரன்களை 44.42 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
இதில் 8 சதங்களும் 57 அரைசதங்களும் அடங்கும். இவரது தலைமையில் ஆஸ்திரேலியா 49 போட்டிகளில் வென்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் அவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறியபோதும் ரசிகர்கள் எழுந்து நின்று பிரியாவிடை கொடுத்தனர்