மகிந்த ராஜபக்சவின் அதிகார பேராசை திட்டம் தோல்வியில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தி, மைத்திரிபால சிறிசேனவை அரசியல் ரீதியாக அழிப்பதற்காக மகிந்த ராஜபக்சவின் வழிக்காட்டலின் கீழ் மேற...


நுகேகொடையில் 15 ஆயிரம் மக்களை கூட்டி மகிந்த ராஜபக்சவுக்கு பாரிய மக்கள் ஆதரவு இருப்பதாக காட்ட முயற்சிக்கப்பட்டது.
இதன் பின்னர் நடத்தப்பட்ட அப்படியான கூட்டங்கள் வெற்றியளிக்கவில்லை என பொலிஸாரின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
நுகேகொட கூட்டத்திற்கு பின்னர் கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மாத்திரமே கலந்து கொண்டனர்.
இதனையடுத்து அண்மையில் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் 7 ஆயிரம் பேர் மாத்திரமே கலந்து கொண்டதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இருக்கும் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை வரவழைத்ததன் மூலமே இந்த கூட்டமும் சேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
நுகேகொட மற்றும் கண்டியில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டவர்களே இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ராஜபக்ச அலை என்பது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்அவுட்கள் மூலம் உருவாக்கி காட்டிய போலி அலை என்பது தெளிவாகியுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் தற்போது மகிந்தவுடன் வலம் வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதை தவிர அவர்களுக்கு மாற்று வழி கிடையாது எனவும் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.