எனது உயிருக்கு ஆபத்து ஏதும் நடந்தால் அரசாங்கமே பொறுப்பு: மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உயிர் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளதுடன், தனக்கு எதுவும் நேர்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறு...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உயிர் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளதுடன், தனக்கு எதுவும் நேர்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் எனக் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அரசாங்கம் அவருக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு போதுமானதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு அரசாங்கம் 6 வாகனங்களை வழங்கியுள்ளது. எனினும் 21 வாகனங்கள் தேவை என மகிந்தவின் ஊடக இணைப்பாளர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி விடுதலைப் புலிகளை தோற்கடித்ததால், விடுதலைப் புலிகளின் ஆதரவாளரிடம் இருந்து உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாகவும் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் ஒருவர் அவரது பாதுகாப்புக்காக கடந்த 27 ஆம் திகதி பஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.

எனினும் அரசாங்கம் இதுவரை முன்னாள் ஜனாதிபதி ஒரு உத்தியோபூர்வ இல்லத்தை கூட வழங்கவில்லை எனவும் மகிந்த ராஜபக்சவின் ஊடக இணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 1782923888405308383

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item