அடுத்த கட்ட நகர்வு குறித்து மஹிந்த தரப்பு அவசர கூட்டம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பினர் அவசர கூட்டமொன்றை இன்று நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவ...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பினர் அவசர கூட்டமொன்றை இன்று நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை மாற்றியமைக்கவுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து இந்த அவசர பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் இப்பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தமையை தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் உள்ள மஹிந்த தரப்பினர் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.