போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை தொடர்பில் ஐவர் கைது
போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்ய முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் நாட்டில் சில பகுதிகளில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளன...


பமுணுகம உஸ்வெடகெசியாவ பகுதியில் ஒரு தொகை வலி நிவாரண மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வலி நிவாரண மாத்திரைகளை போதைப்பொருளுக்கு அடிமையானோர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2000 வலி நிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுமதிப்பத்திரமின்றி குறித்த மாத்திரைகளை சந்தேகநபர்கள் வைத்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, 670 கிராம் போதைப்பொருளை வைத்திருந்த நபர் தம்புத்தேகம, தம்மென்னாபுர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கையடக்க தொலைபேசிக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
தம்மென்னாபுர பகுதயை சேர்ந்த சந்தேகநபர், தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலும் வெல்லம்பிடிய, மீதொடமுல்ல பகுதியில் 50 கிராம் போதைப்பொருளுடன் இரு சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீதொடமுல்ல மற்றும் வெலிகட பகுதிகளை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.