மீண்டும் அரசியலில் ஈடுபடவுள்ள குமார் குணரத்னம்
தேர்தல் வியாபாரங்களில் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் ஈடுபடுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. ...


இதுவரையில் அவர் மீண்டும் பிரபலமாக அரசியலில் இணைத்துக்கொள்வதற்கு முன்னிலை சோசலிசக் கட்சி முயற்சிப்பதாக தெரியவந்துள்ளதொடு, தற்போதைய தேர்தல் பரபரப்பேற்பட்டுள்ளதனால் குமார் குணரத்னம் இலங்கையில் இருப்பதற்கு அனுமதி கிடைக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
குமார் குணரத்னத்தை தேர்தல் வியாபாரத்திற்கு இணைத்து கொள்வதற்கான எதிர்பார்ப்புள்ளதாகவும், இது தொடர்பிலான தரப்பினரிடம் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜயகொட சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்து்ளார்.
குமார் குணரத்னம் இலங்கையில் தங்கியிருப்பதற்கு அனுமதி கிடைக்க வேண்டுமாயின் முதலில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கேட்க வேண்டியது அவசியம் எனவும், அவ்வாறு இல்லையேல் தனியாக தீர்மானம் மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை என பொது ஒழுங்கு மற்றும் கிறிஸ்துவ விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க
தெரிவித்துள்ளார்.