பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதல்: பொலிசாருக்கு கிடைத்த அதிர்ச்சியான புதிய தகவல்
பிரான்ஸ் நாட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நபர் ஒருவரின் தலையை வெட்டி வேலியில் தொங்க விட்ட கொலையாளி குறித்து தற்போது கிடைத்துள்ள புதிய தக...


பிரான்சின் லியோன் நகரில் உள்ள Saint-Quentin-Fallavier என்ற பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நபர் ஒருவரின் தலை வெட்டப்பட்டு அங்குள்ள வேலியில் மாட்டி சென்றது பொலிசாரை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய பிரான்ஸ் நாட்டு உள்துறை பாதுகாப்பு அமைச்சகம், கொலையான நபர் விழுந்து கிடந்த இடத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இரண்டு கொடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் பின்பு நடந்த விசாரணையில் அது தீவிரவாத தாக்குதல் தான் என உறுதி செய்யப்பட்டது.
பிரான்ஸ் பிரதமரான மேனுவேல் வால்ஸ், இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் நடந்த விசாரணையில் பொலிசாருக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர், அவரை கொலை செய்த தீவிரவாதியின் தலைவர் தான் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், கொலையாளியான Yassin Salhi(35) என்ற நபர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன் என்பது அவனை கைது செய்து விசாரணை நடத்தி வரும் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
கொலையாளியும், கொலை செய்யப்பட்ட அவனுடைய தலைவனும் ஒரே இடத்தில் தான் ஓட்டுனர்களாக பணி செய்து வந்துள்ளனர்.
இருவருக்கும் இடையே நிகழ்ந்த தனிப்பட்ட பிரச்சனையில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். மேலும், தன்னுடைய தலைவனை ஒரு வாகனத்தில் வைத்து தலையை வெட்டி, அதனை அங்குள்ள வேலியில் மாட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பொலிசாருக்கு அதிர்ச்சி தரும் விடயமாக யாசின் ஷாகில் தனது முதலாளியின் தலையை துண்டித்து அதனுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் கனடாவில் உள்ள ஒரு நபருக்கு அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் உறுதியாக தெரியப்படாததால், பொலிசாரின் கட்டுப்பாட்டில் உள்ள கொலையாளியிடம் தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.