சிறை தகர்ப்பு, தீவிரவாதிகள் தப்பிஓட உதவிசெய்த 7 பாதுகாவலர்கள் உள்பட 10 பேர் கைது
பாகிஸ்தானில் சிறையை தகர்த்து தீவிரவாதிகள் தப்பிஓடுவதற்கு உதவிசெய்த 7 பாதுகாவலர்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கில்கிட்-பா...

http://kandyskynews.blogspot.com/2015/03/7-10.html

பாகிஸ்தானில் சிறையை தகர்த்து தீவிரவாதிகள் தப்பிஓடுவதற்கு உதவிசெய்த 7 பாதுகாவலர்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கில்கிட்-பால்திஸ்தான் பகுதியில் 7 பாதுகாவலர்கள் மற்றும் மத தலைவர்கள் 3 பேர், கடந்த 2013-ம் ஆண்டு 10 வெளிநாட்டவர்கள் கொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்புவதற்கு உதவிசெய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்சனையில் உள்ள கில்கிட்-பால்திஸ்தானில் உள்ள சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று 4 தீவிரவாதிகள் தப்பிஓடினர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் உயரமான மலைப்பகுதியில் உள்ள கில்கிட் பால்திஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் தப்பிஓடிய பின்னர் பாகிஸ்தான் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மின்வார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை அறிந்து போலீசார் அப்பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டுவந்தனர். சாலைகள் அனைத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால் காயம் அடைந்த தீவிரவாதிகள் தண்ணீருக்குள் குதித்து தப்பிஓடிவிட்டனர். இச்சம்பவத்தில் தீவிரவாதிகளை தப்பிஓடசெய்த 7 பாதுகாவலர்கள், 3 மத தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணையும், தப்பிய ஓடிய தீவிரவாதிகளை பிடிப்பதற்கான பணியும் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போலீசார் தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். தீவிரவாதிகள் காயம் அடைந்து இருப்பதால் அவர்கள் அங்கு மருத்துவ சிகிச்சை பெறும் வசதியாக மருத்துவமனை அல்லது கிளினிக்களில் தலைமறைவாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவமனைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகளை தேடும் எல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது டான் செய்தி இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது