பிறந்து 3 நாளில் கடத்தப்பட்ட பெண் 17 வருடத்துக்குப் பின் பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்
தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரைச் சேர்ந்த தம்பதி செலஸ்ட்–மோர்னே நர்ஸ். இவர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 1997 ஏப்ரல...
http://kandyskynews.blogspot.com/2015/03/3-17.html
தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரைச் சேர்ந்த தம்பதி செலஸ்ட்–மோர்னே நர்ஸ். இவர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 1997 ஏப்ரலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஷெபானி என பெயரிட்டனர். பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் தாயின் அருகில் அக்குழந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ குழந்தையை கடத்திச் சென்று விட்டனர். பல இடங்களில் தேடியும் அக்குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் லெஸ்ட்–மேர்னே நர்ஸ் தம்பதிக்கு அதன் பின்னர் 3 குழந்தைகள் பிறந்தன. இருந்தாலும் காணாமல் போன ஷெபானியின் பிறந்த நாளை அந்தத் தம்பதி விடாமல் கொண்டாடி வந்தது. இதற்கிடையே ஷெபானி படிக்கும் பள்ளியில் இவர்களது இளைய மகள் காசிடி நர்ஸ் சேர்க்கப்பட்டாள். இருவரின் முகச் சாயலும் ஒன்றாகவே இருந்ததைப் பார்த்த பலருக்கும் ஆச்சரியம்.
மாணவிகள் அது குறித்து ஆச்சரியமாகப் பேசினர். இது குறித்து விசாரிக்கப்பட்ட போது, ஷெபானி கடத்தப்பட்டு பல இடங்களில் வேறு பல பெண்களால் வளர்க்கப்பட்டு வருவது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 17 வருடத்துக்கு பிறகு செலஸ்ட் தம்பதியினர் ஷெபானியை மீட்டனர். டி.என்.ஏ. சோதனை நடத்தியதில் அவள் இவர்களது குழந்தை என உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஷெபானியை குழந்தையாக இருந்தபோது கடத்தியதாக 55 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டாள்.





Sri Lanka Rupee Exchange Rate