ரஷ்யா: மாஸ்கோவில் கூடும் நேம்ஸோவ் அஞ்சலி பேரணி
ரஷ்யாவில் சுட்டுக்கொல்லப்பட்ட எதிரணி செயற்பாட்டாளர் போரிஸ் நேம்ஸோவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தலைநகர் மாஸ்கோவில் நடக்கும் பேரணியில் பெரு...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_25.html

ரஷ்யாவில் சுட்டுக்கொல்லப்பட்ட எதிரணி செயற்பாட்டாளர் போரிஸ் நேம்ஸோவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தலைநகர் மாஸ்கோவில் நடக்கும் பேரணியில் பெருந்திரளான மக்கள் கூடியுள்ளனர்.
போரிஸ் நேம்ஸோவ் அடையாளம் தெரியாத ஆயுததாரியால் சுட்டுக்கொல்லப்பட்ட பாலத்திற்கு அருகே கூடுகின்ற இந்தப் பேரணியில் சுமார் 50 ஆயிரம் பேர் வரையில் கூடுவார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
போரிஸ் நேம்ஸோவைக் கொன்றவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று அவரது வழக்குரைஞர் பிபிசியிடம் கூறினார்.
அதிபர் விளாடிமிர் புடின், தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் விசாரணைகளைப் பொறுப்பேற்றுள்ளதால், இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளில் பலன் கிடைப்பது சந்தேகமே என்றும் அவர் கூறியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate