அமெரிக்காவில் மீண்டும் தாக்குதலுக்குள்ளான இந்து கோவில்: மக்கள் பதற்றம்
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓஹியோ மாநிலத்தில் உள்ள கெண்ட...

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
ஓஹியோ மாநிலத்தில் உள்ள கெண்ட் நகரில் இந்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் தாக்கப்பட்டுள்ளதை நேற்றிரவு பார்த்த கோவில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் அளித்தனர். அந்த இந்து கோவிலின் பல ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதோடு, கோவில் சுவற்றில் ’பயம்’ என்று ஸ்ப்ரே பெயிண்டிங்கால் வார்த்தைகள் எழுதிவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க உளவுத்துறை, மற்றும் கெண்ட் நகர் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல கடந்த 15-ம் திகதி, சியாட்டில் நகரில் உள்ள போத்தல் இந்து கோவில் சுவரில் ’வெளியே போ’ என்று எழுதப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மற்றொரு கோவில் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ![]() |