முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பொடுபோக்கு..!!
நாட்டில் வடக்கு ,கிழக்கு , மற்றும் மேல் மாகாணங்களில் முஸ்லிம்கள் தமது காணிகளை பறிகொடுத்து நிற்கும் பிரச்சினைக்கு முஸ்லிம் அரசியல்வாதிக...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_52.html
நாட்டில் வடக்கு ,கிழக்கு , மற்றும் மேல் மாகாணங்களில் முஸ்லிம்கள் தமது காணிகளை பறிகொடுத்து நிற்கும் பிரச்சினைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் இது வரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் சுமார் 50,000 ஏக்கர் வயல் காணிகள் பறிபோயுள்ள பிரச்சினைகளை தொடர்பான ஆவணக் கோவைகள் நிறைய என் மேசையில் உள்ளன என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொது செயலாளரும் ,பிரதியமைச்சருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்
கிழக்கில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிபோனது தொடர்பாகப் பிரச்சினைகள் உள்ளன. 100 நாள் வேலைத் திட்டத்தில் அப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா? என வினவப்பட்டபோதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது ,முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பில் பிரதமருக்கு ஓர் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறேன். அறிக்கை சமர்ப்பித்த பின் இது தொடர்பான பேச்சு வார்த்தையும் வேண்டிய செயற்பாடும் இடம்பெறலாம். 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர்க்கவே முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த விஷயத்தை சிறப்பாகக் கையாள அரசு ஒரு செயலணிக் குழுவை நியமிக்க வேண்டுமென அரசைக் கோருகிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்க வழிபிறக்கும். கிழக்கில் 50,000 ஏக்கர் வயல் காணிகள் இந்தப் பாதிப்புக்குட்பட்டவை. இவை தமிழில் கண்டங்கள் எனப்படும் அனைத்தும் முஸ்லிம்களுக்குரியவை எனவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார் .
அதேவேளை நாட்டில் வடக்கு ,கிழக்கு , மற்றும் மேல் மாகாணங்களில் முஸ்லிம்கள் தமது காணிகளை பறிகொடுத்து நிற்கும் பிரச்சினைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் இது வரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் . முன்னைய அரசின் நகர அபிவிருத்தித் திட்டத்தின் செயற்பாடுகளால் கொழும்பில் கொம்பனித்தெரு மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
இது தொடர்பில் எமக்கு கருத்துரைத்த சமூக ,அரசியல் ஆர்வலர்கள் வடக்கு ,கிழக்கு , மற்றும் மேல் மாகாணங்களில் முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளில் காணிப் பிரச்சினை முகியமானது ஆனால் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தாம் நடவடிக்கை எடுத்துகொண்டு இருப்பதாக அறிவித்தாலும் பரிகொடுதுள்ளவற்றை மீட்டு உரியவர்களிடம் மீண்டும் அவற்றை ஒப்படைக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை , கடிதம் எழுதுகிறோம் , ஆணவம் கையளிக்கப் போகிறோம் என்பது மட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கையாக ஒருபோதும் அர்த்தப்படுத்த முடியாதவை என குற்றம் சாட்டினர் .
முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவரை முஸ்லிம்களின் பிரச்சினைகளை முறையாக அடையாளப்படுத்தி அவற்றை தீர்பதற்கான அர்த்தபுஷ்டியான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை , முஸ்லிம் சமூகத்தின் எரியும் பிரச்சினைகள் பற்றிய விஞ்ஞான பூர்வமான தரவுகளை கூட முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற்றுகொள்வதற்கு முயற்சிப்பதாகக் கூட அறியமுடியவில்லை என குற்றம் சாட்டினர்.