சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மகிந்தவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன்? - ஜனாதிபதி மைத்திரிபால கேள்வி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன் என ஜனாதிபதி மைத்திரிபால சி...



ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். கட்டுநாயக்க ''புல் மூன்'' விடுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
   
ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தனது முதல்நாள் உரையில் நுகேகொட பேரணியில் இடம்பெற்ற உரைகளை குறித்து கண்டித்து பேசியுள்ளார். மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பாவினதும், தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்தவின் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன கண்டித்துள்ளார். பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த இருவரும் மகிந்த மீது கொண்டுள்ள பயம் காரணமாக எனக்கு எதிராக அறிக்கை விடுகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய குழுவின் முடிவுகளையோ அல்லது அகில இலங்கை குழுவின் முடிவுகளையோ எவரும் மாற்றக்கூடாது எனவும் ஜனாதிபதி கோரியுள்ளார். நுகேகொட பேரணிக்கு சென்றவர்களுக்கு எதிராக நான் செயற்படமாட்டேன், எனினும் அனைவரும் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.எதிர்காலத்தில் எவரும் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படக்கூடாது எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட செயலமர்வில் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவுடன் கடுமையாக வாதாடியுள்ளார். நுகேகொட பேரணிக்கு பேருந்துகள் எவ்வாறு வந்தன என்பது எனக்கு தெரியும், யார் பணம் செலவழித்தார்கள் என்பதும் எனக்கு தெரியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தருணத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து நாங்கள் பேசத் தேவையில்லை, தேவையற்ற விவாதங்கள் கட்சியை பலவீனப்படுத்தும், எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

Related

இலங்கை 2563663882179917673

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item