மகிந்தவுக்கு ஆலோசனை கூறப் போய் கோத்தபாயவிடம் வாங்கிக் கட்டிய சஜின் வாஸ் குணவர்த்தன!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் வர வேண்டாம் என்று ஆலோசனை கூறிய தன்னை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ர...

![]()
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் வர வேண்டாம் என்று ஆலோசனை கூறிய தன்னை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடுமையாக திட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சரத் குமார குணரட்னவின் வீட்டில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
|
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் மகிந்த அவர்களுடன் நானே மெதமுலன கிராமத்திற்கு சென்றேன். மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வர முயற்சிக்க வேண்டாம் என நான் அவருக்கு கூறினேன். நாடாளுமன்ற உறுப்பினராக வந்து எதிர்க்கட்சித் தலைவராக முயற்சிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தேன்.
நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு வந்தால், அவருக்கு இருக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்று சுட்டிக்காட்டினேன். இதனை கேள்விப்பட்ட கோத்தபாய ராஜபக்ச என்னை தொடர்பு கொண்டார். சிறந்த வார்த்தைகளாக என்னை திட்டித் தீர்த்ததாக சஜின்வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
|