தெற்கு சுடானில் அரச ஆதரவு இயக்கத்தால் கடத்தப்பட்ட சிறுவர்கள்
தெற்கு சுடானில் அண்மையில் கடத்தப்பட்ட சிறுவர்கள் எல்லாம் அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கும் ஒரு ஆயுதக் குழுவாலேயே கடத்தப்பட்டிருப்பதாக ஐந...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_31.html
தெற்கு சுடானில் அண்மையில் கடத்தப்பட்ட சிறுவர்கள் எல்லாம் அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கும் ஒரு ஆயுதக் குழுவாலேயே கடத்தப்பட்டிருப்பதாக ஐநா கூறியுள்ளது.

ஜோண்சன் ஒலொனியின் சில்லுக் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கிலானது என்றும், முன்னர் நம்பப்பட்டது போல அது 89 அல்ல என்றும் ஐநாவின் சிறார்களுக்கான அமைப்பான யுனிசெஃப் கூறியுள்ளது.
அவர்களில் பலர் பயிற்சி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், 12வயது வரை கொண்ட அந்த சிறுவர்கள் ஆயுதந்தாங்கியுள்ளதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
அந்த தீவிரவாதக் குழு எந்தவகையிலும் தமது கட்டுப்பாட்டில் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது.


Sri Lanka Rupee Exchange Rate