பாக்தாத் தேசிய அருங்காட்சியகம் மீண்டும் திறக்கபட்ப்டது
பாக்தாத் அருங்காட்சியகத்தில் உள்ள அஸ்ஸிரிய காலத்து சிலைகள் இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள தேசிய அருங்காட்சியகம் 12 ஆண்டுகளுக்குப் பின்னர்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_2.html

இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள தேசிய அருங்காட்சியகம் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகளின் படையெடுப்பின்போது இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டது.
இந்த அருங்காட்சியகம் பெருமளவு திருத்த வேலைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
போர்க்காலத்தில் சூறையாடப்பட்டிருந்த பெருமளவு தொல்பொருட்கள் மீளவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடக்கு இராக்கின் மோசூல் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்த பழமைப் பெருமை மிக்க சின்னங்கள் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளால் இந்த வாரத்தின் முற்பகுதியில் அழிக்கப்பட்டிருந்தன.
அதற்கு பதில்நடவடிக்கையாகவே, பாக்தாத் தேசிய அருங்காட்சியகம் அதிகாரபூர்வமாக மீளத்திறக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸிரிய காலத்து சிலைகள் இடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தை ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சில் கண்டித்துள்ளது.
சிலைவழிபாட்டை எதிர்ப்பதாகக் கூறியே ஐஎஸ் ஆயுததாரிகள் அவற்றை அழித்திருந்தனர்.
ஆனால், அவற்றை அழித்த நடவடிக்கையை 'காட்டுமிராண்டித் தனம்' என்று ஐநா கண்டித்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate