சுதந்திர கட்சி வெற்றி பெற வேண்டுமாயின் மஹிந்த அமைதியாக வேண்டும்!– அர்ஜுன ரணதுங்க
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பெற்றி பெற செய்ய வேண்டுமானால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைதியாக வேண்டும் என...


அத்தகல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பார்க்கும் போது பிளவடைந்து காணப்படுகின்றது. அதற்கு பிரதான காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பெற செய்துவிட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரத்தை கொடுக்க வேண்டிய அவசியம் அவருக்கு காணப்படுகின்றது.
அவர் கட்சியை விட்டு விலகி தனியாக போட்டியிட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடையும்.
மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மீது அன்பு வைத்திருக்கின்றார் என்றால் சில காலங்களுக்கு கட்சியை விட்டு ஒதுங்கி, அமைதியாக இருக்க வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.