கட்டார் மன்னரின் விஜயத்தை முன்னிட்டு புதிய போக்குவரத்து ஏற்பாடுகள்
கட்டார் நாட்டின் மன்னர் தமீமீ பின் ஹமட் அல் தானியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து க...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_137.html

கட்டார் மன்னார், நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு, கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயில், பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்தை, பொரல்லை, டி.எஸ். சந்தி, ஹெர்ட்ன் பிளேஸ், லோட்டஸ் வீதிக்கு எதிரில் உள்ள வீதி, லிபர்ட்டி சுற்றுவட்டம், சென் மைக்கல் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டியில் இருந்து காலி முகத்திடல் வரையான காலி வீதி, என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் என்பன நாளைய தினம் மதியம் 1.30 முதல் 2.30 வரை மூடப்படும் என பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
அதேவேளை கட்டார் மன்னர், விமான நிலையத்திற்கு செல்வதற்காக அதே வீதிகளில் பிற்பகல் 3.45 முதல் 4.45 வரை வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும். இலங்கை வரும் கட்டார் மன்னர் தானி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இருத்தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்


Sri Lanka Rupee Exchange Rate